மனமே மா மருந்து ....

GmailSelvaraj Raman <selvamraju0904@gmail.com>

மனமே , மா , மருந்து

raman selvaraj <meetmeathome@outlook.com>21 December 2025 at 12:34
To: nostalgiaselvasil@outlook.com

//அறிவு மனதை கட்டுப்படுத்துகிறதா அல்லது மனம் அறிவை கட்டுப்படுத்துகிறதா?//

முனைவர் பத்மஸ்ரீ சுந்தரம் சாலமன் பாப்பையா அவர்களது பட்டிமன்றத்தின் தலைப்பைப் போன்ற இந்த வினாவிற்கு விடையளிப்பதற்கு முன்பாக, சிந்தனைக்கும் (எண்ணம்), சிந்தித்தலுக்கும் (செயல்) உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது உசிதம். அதற்கு, கீழ்க்கண்ட - ஏற்கனவே எழுதப்பெற்ற - விடைகள் உதவக்கூடும்.

“நல்ல எண்ணங்கள் முக்கியமா இல்லை நல்ல செயல்கள் முக்கியமா?”

ஸ்வாமி பிரகாஷ் இன் தற்குறிப்பு போட்டோ
ஸ்வாமி பிரகாஷ்
 · டிச. 13
நல்ல எண்ணங்கள் முக்கியமா இல்லை நல்ல செயல்கள் முக்கியமா?
//நல்ல எண்ணங்கள் முக்கியமா இல்லை நல்ல செயல்கள் முக்கியமா?// "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு" என்கிறார் வள்ளுவர். முதலில் சிந்தனை செய்.. பிறகு செயல் புரி.. அதை மாற்றி செய்தால் விளைவு சுமாராகத்தான் இருக்கும் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். எண்ணம் விதை எனில், செயல் பயிர் [அ] செடி. எண்ணம் செடி என்றால், செயல் மலர். எண்ணங்கள் மலர்கள் எனில், செயல் மலர்மாலை. ஆக, செயல் நிகழ சிந்தனை ஆதாரத் தேவை என்றாகிறது. எண்ணத்திலோ, செயலிலோ நல்லது தீயது என்பதெல்லாம் நம்முடைய அனுபவம் சார்ந்த முன் முடிவுகளால் அல்லது தீர்மானங்களால் நாமே முடிவு செய்வதுதான். இதனால்தான் நமக்கு நல்லது என்று உறுதியாகத் தோன்றும் ஒரு விஷயம், நமது குடும்பத்திலோ நட்பு வட்டத்திலோ பணியிடத்திலோ உள்ள, நாம் நன்கு அறிந்த ஒரு ஆசாமிக்கு கெட்டதாகவோ பயனற்றதாகவோ தோன்றுகிறது. உண்மையில் நல்லது எது என்று பார்த்தோமானால், பிற உயிர்களுக்கு எவ்வகையிலும் துன்பம் விளைவிக்காத சிந்தனை மற்றும் செயல் ஆகியவையே. இம்மாதிரியான சிந்தனை மற்றும் செயல்கள் பொதுவாகவே பயனுள்ளதாக இருப்பது இயல்பு. அத்தகைய செயல்களைப் புரிந்தோரை, சிந்தனைகளைப் பகிர்ந்தோரை, இன்றளவும் நினைவுகூர்ந்து போற்றுகிறோம்; மேற்கோள் காட்டுகிறோம்! ஒரு கடலின் அலைகள் எவ்வாறு யாருடைய கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல் தன்னிச்சையாக கரையை நோக்கி மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றனவோ, அதுபோலத்தான் நம்முடைய எண்ணங்களும். எண்ணங்கள் உருவாவது நம்முடைய மனத்தில். ஆகவே மனம் என்பது தன்னிச்சையாக இயங்கும் ஒரு கருவி என்றாகிறது. தன்னிச்சையாக இயங்கும் எதையும் எவர் ஒருவராலும் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. சூரியனின் இயக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா என்ன? இதனால் தான் 'மனத்தை வெல்லப் போகிறேன்'.. 'மனதைக் கட்டுப்படுத்துகிறேன்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிவது அபத்தம். ஒருவர் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் மனம் என்பது அதுபாட்டுக்கு தன் வழியேதான் போய்க்கொண்டிருக்கும். அதிகபட்சமாக அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமே தவிர, கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்று வரிந்து கட்டிக் கொண்டு கிளம்புவதெல்லாம் சிரிப்பே வராத திரைப்படக் காமெடி போலத்தான். தன்னுடைய மெய்தேடும் முயற்சிகள், பயிற்சிகள் ஆகிய அனைத்தையும் கைவிட்டு, 'இனி என்னால் ஆவது ஏதுமில்லை' என்று சுய முயற்சியை முற்றிலுமாக கைவிட்ட நிலையில், போதி மரத்தடியில் சோர்ந்து அமர்ந்த கௌதமர் எனும் புத்தர், தன்னுடைய மனத்தின் தன்னிச்சையான இயக்கத்தைக் கவனித்தார் - ஒரு மௌன சாட்சியைப் போல. அந்தக் கணத்திலேயே, அதன் காரணமாகவே அவர் மெய்ஞானம் அடைந்தார் என்கிறார் ஒரு தற்கால ஞான யோக மார்க்க குருநாதர். மனம் என்பது ஒரு மகத்தான கருவி. படைப்பில் உள்ள வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத வகையில் ஐம்புலன்கள் மூலமாக உள்வாங்கும் அனைத்தையும் ஆராய்ந்து, பகுத்து அறிவதற்கான திறன் படைத்தது மனிதர்களுடைய மனம். மனத்தில் இருந்து உதிக்கும் சிந்தனைகள் கடல் அலை போல் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் போனாலும், அதன் சிந்திக்கும் திறனை நம்முடைய செயல் புரியும் தேவைகளுக்காக நம்மால் பயன்படுத்த முடியும். மெய்ஞானம் அடைய ஆன்மீக ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் தற்கால குருமார்களில் ஒருவரான ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள், மனத்தின் இயக்கத்தை ஆழ்ந்து கவனித்து ஆராய்ந்து, சிந்தித்தல் மற்றும் சிந்தனை என்று இரு வகையாக பிரித்து விடுகிறார். சிந்தனை என்பது மனத்தின் தன்னிச்சையான இயக்கம் அதை நாம் கட்டுப்படுத்து இயலாது. ஆனால் கடலின் ஒவ்வொரு அலையையும் கட்டுப்படுத்த / நிறுத்த முயல்வது போன்ற, ஒவ்வொரு எண்ணத்தையும் கவனிக்க, தொடர முயலும் மடமையை நம்மால் நிச்சயமாகத் தவிர்க்க முடியும். சிந்தித்தல் அல்லது சிந்தனை செய்தல் என்பது மனத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி நாம் செய்யக்கூடிய ஒரு செயல். அதனைப் பயனுள்ள செயல்கள் புரிவதற்கு செவ்வனே பயன்படுத்தினால், நம்முடைய மனத்தைக் கொண்டு உருவாக்கிய சிந்தனையைப் பயன்படுத்தி, மகத்தான செயல்களை நம்மாலும் செய்ய முடியும் என்பதில் ஐயமில்லை. சீராக சிந்தித்து, செவ்வனே செயல் புரிந்து, வாழ்க வளமுடன்.🙌🏼🤔👌🙏🏼 எபிலாக்: 'எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.' இதைச் சொன்னவரும் வள்ளுவரே. சிலர் தீவிரமாக பல விஷயங்களைப் பற்றி சிந்திப்பார்கள். அதன்பின் எதையோ தீர்மானித்து செயலும் புரிவார்கள். ஆனால் அந்த செயலின் விளைவு அவர்கள் எதிர்பார்த்தது போல அமையாது. அந்நிலையில் ஊக்கம் இழந்து தலைவிதியையோ, இறைவனையோ, சக மனிதரையோ செயலின் தோல்விக்குக் காரணம் கூறுவார்கள். இந்நிலை ஏன் ஏற்படுகின்றது என்று சிந்தித்தால் (pun totally intended 😜), அவர்களது சிந்தனையை செயலாக்கும் போது, மன உறுதி இல்லாமல், ஏனோதானோ என்று செயல் புரிந்திருப்பது தெரியவரும். ஆகையினால்தான் வள்ளுவர், சிந்தித்ததைப் போலவே செயலானது எதிர்பார்த்த விளைவை சிறப்பாக அளிக்க வேண்டுமானால், அதற்கு அந்தச் செயல் முழுமையாக நிறைவு பெறும் வரை மன உறுதிடன் செயலாற்றுவதும் அத்தியாவசியம் என்று வலியுறுத்துகிறார். ~ஸ்வாமி | '@PrakashSwamy

எண்ணம் [அ] சிந்தனை உருவாக்கம் என்பது இயல்பாக ஒரு பிரவாகம் போன்ற மனத்தின் இயக்கம். பிரம்மாண்டமானதோர் அணை கட்டினாலும், பிரவாகத்தைத் தடுக்கவியலாது. அதுபோல், மனத்தின் இயல்பான இயக்கத்தை நம்மால் கட்டுப்படுத்தவியலாது.

ஆனால், நீரோட்டம் போன்ற கட்டுக்கடங்காத ஓட்டத்தை, அதாவது தொடர்ந்து எண்ணங்களை உருவாக்கும் மனத்தின் இயக்கத்தை, நம்மால் கவனிக்கவியலும். சித்தார்த்தன் அதனை கவனித்தபோது, கௌதமர் எனும் புத்தர் ஆனார்.

‘அதற்குக் கடுமையான பயிற்சியும், முயற்சியும் வேண்டுமே?’ என்கிற வினா எழுவது இயல்பு. ஆனால் கௌதமர் மெய்ஞ்ஞானம் அடைந்தது, அத்தனை பயிற்சிகளையும் முயற்சித்து, அதனால் எதிர்பார்த்த பயனை அடையாது, அயர்ந்து போய் ‘சும்மா இரு’ந்த போதுதான். போதி மரத்தடியில் அவரது என்லைட்டன்மெண்ட் அனுபவம் நிகழ்ந்தது இன்ஸிடென்ட்டல்!

இக்கணத்தில் தோன்றும் ‘வ்வாட் த ஹெக்..?’ என்ற எண்ணத்தை, ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்..’ என்று ஒதுக்கி விட்டு, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கீழ்க்கண்ட இப்பழம் பதிவை வாசிக்கவும்…

“ஓர் முடிவை, இது மனம் சார்ந்தது, இது அறிவு சார்ந்தது என்று எ‌வ்வாறு பிரித்தாள்வது?”

ஸ்வாமி பிரகாஷ் இன் தற்குறிப்பு போட்டோ
ஸ்வாமி பிரகாஷ்
 · டிச. 12
ஓர் முடிவை, இது மனம் சார்ந்தது, இது அறிவு சார்ந்தது என்று எ‌வ்வாறு பிரித்தாள்வது?
//ஓர் முடிவை, இது மனம் சார்ந்தது, இது அறிவு சார்ந்தது என்று எ‌வ்வாறு பிரித்தாள்வது?// நீங்கள் ஒரு புதிய அலைபேசி வாங்கும்பொருட்டு கடைவீதியில் சுற்றுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பிரபல கடைகள் முன்பு நீண்ட வரிசையில் நின்று, உடல் வெப்பம் அளக்கப்பட்டு, கைகளில் கிருமி நாசினியைத் தேய்த்துக் கொண்ட பிறகுதான் உள்ளே செல்ல முடியும். அதன்பிறகும், விற்பனையாளரின் சொல்வன்மை, தள்ளுபடித் தூண்டில், இலவச வலை ஆகியவற்றைக் கடந்து, உங்களது தேவைக்கேற்ற அலைபேசியை அங்கு வாங்கக் கூடுமே தவிர, நிச்சயமாக வாங்குவீர்கள் என்பது உத்தரவாதமில்லை. ஒரு வழியாக ஏதோ ஒரு அலைபேசியை வாங்கியபின், உங்கள் நண்பர் சொல்கிறார் 'அடடா, இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்தா, அமேசான் (அல்லது ஃப்ளிப்கார்ட்) சேல் வருதே... அதுல நல்ல டிஸ்கௌண்ட்டோட, ஈஎம்ஐல வாங்கியிருக்கலாம்ல...' அந்தக் கணமே உங்களுக்குப் புதிய அலைபேசி வாங்கிய குதூகல பலூனில் காற்று இறங்கியது போல ஆகிவிடும். கோவிட்-19க்கு இன்னமும் தடுப்பு மருந்தோ, முழுமையான குணப்படுத்தும் மருத்துவ வழிமுறையோ இல்லாதபோதும், ஆயிரக்கணக்கான மக்கள் ஏதாவது ஒரு கடை முன்பு [அ] கடையினுள், தங்களது உயிரைப் பணயம் வைத்து, எதையோ வாங்குவதற்காக நின்று கொண்டிருப்பது நிதர்சனம். அமேசான், ஃப்ளிப்கார்ட், டாடா க்ளிக், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல்... ஏன் பூர்விகா கூடத் தற்போது ஆன்லைன் வர்த்தகம் மூலம் உங்களது எலக்ட்ரானிக் (மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான) தேவையைப் பூர்த்தி செய்யத் தயாராக உள்ளார்கள். கோவிட்-19 பெருநோய்ப் பரவல் ஓரளவுக்கே கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளியே சென்று, கடைமுன்னும் அதனுள்ளும் பலரது முன்னிலையில் காத்திருந்து, நோய்த் தொற்று ஏற்பட நாமே வழிவகுப்பதை விட, வீட்டிலிருந்தவாறே வேண்டிய பொருளை வாங்குவது நிச்சயம் அதிக பாதுகாப்பானதே. என்ன, ஒரு சில தினங்கள் காத்திருக்க வேண்டி வரலாம், அப்பொருளைப் பெற. ஆனால் நாம் பெரும்பாலும் என்ன செய்கிறோம்... கடை வாசலில், முகக்கவசத்துடன் காத்திருக்கத்தானே செய்கிறோம் (சிலர் அதைத் தளர்த்தி விட்டவாறு வேறு நிற்பார்). சோஷியல் டிஸ்டன்ஸிங்கை கூகிளில்தான் தேடிப் பார்க்க வேண்டும். இது ஏனெனில், நாம் விரும்பும் பொருளை - அத்தியாவசிய தேவையோ, அவ்வாறு இல்லாததோ - உடனே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பம் நம்முள் மேலோங்கி இருக்கின்றது. விருப்பங்கள் உணர்ச்சியுடன் இறுக்கமான உறவுள்ளவை. மனிதர்களாகிய நாம் அதிகமாக உணர்ச்சிவசப்படும் ஒரு உயிரினம் வேறு. உணர்ச்சி ரீதியான செயல்கள் - உறுதியான முன்முடிவுகள் உட்பட - எப்போதுமே எதிர்வினைச் செயல்களாகவே (reaction) அமையும். இத்தகைய செயல்களுக்கு உந்துசக்தியாக உள்ள எண்ணம் மனத்தின் உருவாக்கம். மனத்தின் சிந்தனை ஓட்டம் தன்னிச்சையானது. கடற்கரையில் ஓயாது நிகழும் அலைத்தழுவல் போன்றது. எப்போதுமே கடந்த கால நினைவு மற்றும் சேகரித்த தகவல்களைச் சார்ந்தது. அலைபேசி தேவைப்பட்டவுடன் நாம் கடைக்குச் சென்று உடனே புதிதாக ஒன்றை வாங்க முயற்சிப்பது என்பது மனம் சார்ந்த முடிவு. இந்த எதிர்வினைச் செயல், கடந்த காலத்தில் நீங்கள் அவ்வாறு செய்ததை அடிப்படையாகக் கொண்டு, மனத்தால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு. நீங்கள் அதை வெறுமனே செயல்படுத்துகிறீர்கள். அவ்வளவு தான். இங்கு மனம் உங்கள் எஜமானராக இருக்கின்றது என்பது வெள்ளிடை மலை. உங்களுடைய இயக்கத்திற்கான நுகத்தடி, மணிப்பிரம்பு மற்றும் மூக்கணாங்கயிறு ஆகிய யாவுமே மனத்தின் கையில். 'நான் இன்னார்' என்ற சமூக அடையாளத்துடன் இறுமாந்து திரியும் நீங்கள் மனத்தால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை பற்றிய அனைத்து அம்சங்களையும் பகுத்து அறிந்து, அச்சூழ்நிலைக்கு ஏற்ற செயல்கள் பலவற்றை ஆராய்ந்து, அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் செயலாக்கும் முடிவை எடுப்பது புத்தி மற்றும் சித்தம் சார்ந்தது. சூழ்நிலையைப் பல கோணங்களில் அலசி ஆராய்வது புத்தியின் வேலை. ஆராய்ந்தபின் 'சரிப்பா, நாலு ஆப்ஷனை அலசிப் பார்த்தாச்சு... கோவிட்-19 இன்னமும் கண்ட்ரோல் ஆகாததனால, நீ பேசாம அமேசான்லயே ஃபோன் ஆர்டர் பண்ணிரு. அதான் இருக்கறதுக்குள்ளயே சேஃபான ஆப்ஷன். ஒரு வாரம் வெயிட் பண்ணினா நல்ல ஃபெஸ்டிவல் டிஸ்கௌணட்டோட வாங்கலாம். கிளாட் டு பீ ஆஃப் ஹெல்ப். பை ஃபார் நௌ...' என்று சூழ்நிலைக்கேற்ற சரியான முடிவைச் சிந்தித்து எடுப்பது சித்தம். இது முழுமையாக அறிவுசார்ந்த முடிவு - கற்றறிவு மட்டுமல்லாது, அனுபவம் மூலம் பெற்ற அறிவையும் சார்ந்த முடிவு. இத்தகைய அறிவு சார்ந்த முடிவுகளுக்கு மனம் என்பது, சிந்தனை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த, ஆனால் எளிய கருவி. அவ்வளவே. அவசர கதியில், பொருள் சார்ந்த பிழைப்புத் தளத்தில் இயங்கும் மனிதர்களில் பெரும்பாலானோர், மனத்தின் முடிவுகளையே செயல்படுத்துகின்றனர். அறிவுசார்ந்த முடிவை, சூழ்நிலைக்கேற்றவாறு எடுப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவே. சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இவ்வாறே செயல்படுவதால், இதுவே சரியான வழி என்று நாம் நம்புகிறோம். 'Be a Roman while in Rome,' என்பதைப் போன்று, அறிவைப் பயன்படுத்தாமல் அபத்தமாகச் செயல்படுகிறோம். ஆனால் இதை மாற்ற முடியும். எவருக்கும் இந்தப் பயனுள்ள மாற்றம் சாத்தியமே. பகவத் பாதை என்ற ஆன்மீக வழிமுறையைத் தோற்றுவித்தவரான ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் இதை சிந்தனை (thought) மற்றும் சிந்தித்தல் (thinking) என்று இருவிதமாகப் பிரித்து, எளிமையாகப் புரிய வைக்கிறார். அவரது ஞான யோக வழிமுறையில், புறச் செயல்களுக்கு மட்டுமே மனத்தின் இயக்கத்தைப் பயன்படுத்தவும், அகத்தின் அளவில் அதைக் கட்டுப்பாடின்றி, ஒரு பிரவாகம் போல இயல்பாக இயங்க அனுமதிக்கவும் சாதகர்கள் வழிகாட்டப்படுகின்றனர். அதாவது மனத்தின் இயல்பான இயக்கமான சிந்தனை என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. இது அக இயக்கம். ஆனால், அச்சிந்தனையைப் பயன்படுத்தி ஏதேனும் பயனுள்ள செயல்களைப் புரிவது முழுவதும் நம்முடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இது புற இயக்கம். இந்த தெளிவு கிட்டிவிட்டால், நமது செயல்கள் மற்றும் அவற்றுக்கான முடிவுகள் ஆகியவை முழுக்க முழுக்க அறிவு சார்ந்ததாக ஆகிவிடும். அந்நிலையை ஒருவர் அடைந்த பின், அடியேனது குருநாதர் கூறுவது போல, 'நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல,' என்பது தெளிவாகி, வாழ்க்கை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் பிழைப்பு நாடகமும், அதில் நமது வேடமும் புரிந்து விடும். அதன்பின்னர், மனம் சார்ந்த எதிர்வினைச் செயல் நிகழ்வது முற்றிலும் நின்றுவிடுவது மட்டுமல்லாமல், அறிவு சார்ந்த செயல்களும் உண்மையாகவே தேவைப்பட்டால் மட்டுமே நிகழும். அப்போது பிரபஞ்ச நிகழ்வான வாழ்வின் நடனத்தில் நாமும் ஆனந்தமாகப் பங்கு பெறுவது இயல்பான செயலாகிவிடும் - அது மனத்தின் செயலா, அறிவின் செயலா என்ற யோசனைகூடத் தேவைப்படாத வகையில்! ~ஸ்வாமி | '@PrakashSwamy

மனம் ஓர் கருவி. ஆயின், புற உணர்தலுக்கான ஐம்புலன்களைக் கொண்டு அதை நம்மால் உணரவியலாது. ஏனெனில் நம்முடைய பருவுடலில் அது ஓர் உறுப்பல்ல.

எனினும், ஐம்புலன்களைக் கொண்டு நாம் உணர்கின்ற யாவற்றையும் பகுத்து அறியவும், அதன் விளைவாக செயல்களைப் புரியவும், தேவையான சிந்தனையை உருவாக்கும் வல்லமை மனத்திற்கு உள்ளது.

மனத்தின் இயல்பான இயக்கமான சிந்தனை உருவாக்கத்தின் விளைவான எண்ணற்ற சிந்தனைகளைத் தொடர முயன்றால், அயற்சிதான் ஏற்படும். ஆனால், பிழைத்தலுக்கு அத்தியாவசியமான செயல்களுக்குத் தேவையான சிந்தனைகளை உருவாக்க, மனத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளவியலும்.

முடிவு என்பது தீர்மானம். அஃதாவது ஏற்கனவே அறிந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் பொருட்டு, மனத்தால் உருவாக்கப்பட்ட மற்றொரு எண்ணம்தான் நம்முடைய எந்தவொரு தீர்மானமும்.

அத்தகைய தீர்மானத்தை செயல்படுத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை அலசி ஆராய்ந்து, பாதிப்பு ஏற்படுத்தாத, பயனுள்ள செயலை மட்டுமே புரிவதற்கு, மனத்தின் சிந்தனையைப் பயன்படுத்துவது அறிவு. இது முறைப்படி கற்றதாகவும் இருக்கலாம்; அனுபவம் மூலமாகப் பெற்றதாகவும் இருக்கலாம்.

“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.” [குறள் #422]

மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு, என்று மனத்திற்கும் அறிவிற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாக விளக்கும் வள்ளுவர்,

“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.” [குறள் #429]

வருமுன் காக்கும் அறிவை உடையோர்க்கு, அவரை நடுங்கச் செய்கின்ற துன்பமேதுமில்லை என்று உத்திரவாதமும் அளிக்கிறார்.

எனவே, கடந்த அனுபவங்களைச் சார்ந்து, உணர்வுகளை எளிதாக உந்தக்கூடிய எண்ணங்களை உருவாக்கும் மனத்தின் வழியே அங்குமிங்கும் சென்றுழலாமல், நிகழ்கால சூழலுக்கேற்ற நல்வினைக்கான சிந்தனையை மட்டும் தேர்ந்தெடுத்து, அதன் விளைவுகளை ஆராய்ந்து, பயனுள்ள செயல்களுக்கு மட்டும் மனத்தின் இயக்கத்தைப் பயன்படுத்துவதே அறிவுடையோர் செயல் என்பது வெள்ளிடை மலை!

க சொ:

பொதுவாகவே உணர்ச்சிவசப்பட்டு மனம் போன போக்கில் எதிர்வினை புரிகின்ற ஆசாமியாக உள்ளோருக்கு, ஒருக்கால் அறிவுசார் செயல்களைப் புரிவது கடினமானதாகத் தோன்றினால், அதை எளிதாகக் கையாளும் வல்லமை உடைய வேறொருவரின் உதவியை நாடி, அதன்மூலம் பாதிப்பைத் தவிர்த்து, பயன்பெறுவதில் தவறேதுமில்லை!

~ஸ்வாமி


@@@@@@@@@@@@@@@@@@@@@##@


மனம்! மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன்

Published by குமரிநாடன் ருat 02 Dec 2022 06:08 pm | 21574 Views

home_press_blog_4

மனத்திற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில் மகத்துவம் கற்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளை கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து கற்பிப்பதும் மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள முடிகிற மனஉறுதியும், எளிமையாக அகற்றிக் கொள்ள முடிகிற மன உளைச்சலும் எட்டக்கனிபோல பீற்றிக்கொள்ளப்படுவது இந்திய மற்றும் தமிழ்ச்சமூகத்தின் இற்றை நிலையாகும். அதை அகற்றி மகிழும் வகைமைக்கானது இந்தக் கட்டுரை.


16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன். மற்ற ஐந்தறிவு உயிரிகள் பெற்றிருக்கிற, ஐந்து அறிவுகளுக்கான புலன்களையும் மனிதன் கொண்டிருக்கிறான். இதை

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

என்று தனக்கு முந்தைய தமிழ்முன்னோர் நிறுவியுள்ளதாக தொல்காப்பியர் தெரிவிக்கிறார். மேலும்,


புல்லும் மரனும் ஓரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

நந்தும் முரளும் ஈரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

சிதலும் எறும்பும் மூவறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

மாவும் மாக்களும் ஐயறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

மக்கள் தாமே ஆறறி வுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

என்கிற தொல்காப்பிய நூற்பாக்களோடு பொருத்திப் பார்க்கலாம்.


மனிதனின் முதலாவது அறிவுக்கான புலன் மெய். மெய்- தரையில் ஊன்றியிருக்கிற காலிலிருந்து உச்சி வரை அனைத்தும் ஆகும். 


மனிதனின் இரண்டாவது அறிவுக்கான புலன் வாய். வாய்- கழுத்துக்கு மேல், தலையின் தொடக்கத்தில் மெய்யுக்கு அடுத்து இரண்டாவது வெளிவட்டமாக அமைந்தது ஆகும். 


மனிதனின் மூன்றாவது அறிவுக்கான புலன் மூக்கு. மூக்கு- வாய்ப் புலனுக்கு மேல் இரண்டாவது வட்டத்திற்கு வெளியே மூன்றாவது வெளிவட்டத்தில் அமைகிறது.


மனிதனின் நான்காவது அறிவுக்கான புலன் கண். கண்- மூக்கு புலனுக்கு மேல் மூன்றாவது வட்டத்திற்கு வெளியே நான்காவது வெளிவட்டத்தில் அமைகிறது.


மனிதனின் ஐந்தாவது அறிவுக்கான புலன் செவி. செவி- கண் புலனுக்கு மேல் நான்காவது வட்டத்திற்கு வெளியே ஐந்தாவது வெளிவட்டத்தில் அமைகிறது.


மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன் மனம். மனம்- செவிப் புலனுக்கு மேல் ஐந்தாவது வட்டத்திற்கு வெளியே ஆறாவது வெளிவட்டத்தில் அமைகிறது.


மனம் மனிதனின் பின்தலையில் அமைந்து, உடலின் அனைத்து உறுப்புகளின் அறிதலோடு தொடர்பில் அமைகிறது.


தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரம், அது இறை என்றும் பேசப்படுகிறது. 


இதன் அடுத்த கிளை நிலைதாம் ஆறறிவு மனிதன் வரையிலான உயிரிகள் அல்லவா? இவற்றில் ஐம்புலன்கள்- இறையின் அல்லது நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களின் விரிவே ஆகும். ஆறாவது புலன் ஆன மனம்- கடவுளின் அல்லது விசும்பின் விரிவே ஆகும்.


மெய்: அழுத்தத்தை அறிகிறது. இது நாற்திர ஆற்றல்களில் நிலத்தை அறிதல் ஆகும்.


வாய்: ஆறு சுவைகளை அறிகிறது. இது நாற்திர ஆற்றல்களில் நீரை அறிதல் ஆகும்.


மூக்கு: பல்வேறு மணங்களை அறிகிறது. இது நாற்திர ஆற்றல்களில் காற்றை அறிதல் ஆகும்.


கண்: பல்வேறு வடிவங்களை அறிகிறது. இது நாற்திர ஆற்றல்களில் நெருப்பை அறிதல் ஆகும்.


காது: பல்வேறு ஒசைகளை அறிகிறது. இதுவும் நாற்திர ஆற்றல்களில் காற்றையே அறிதல் ஆகும்.


மனத்திற்கு நேரடியாக அறிகிற ஆற்றல் எதுவும் இல்லை. அதனால் இது ஐந்தாவது திரமான விசும்பை அல்லது கடவுளை ஒத்த அறிதலைக் கொண்டுள்ளது. மற்ற ஐம்புலன்களின் அறிவுகள் இந்த மனதில்தாம் பதிவு ஆகிறது. 


அந்த வகையில் தமிழ்முன்னோர் முதலென நிறுவிய இடம் மற்றும் காலத்தை இந்த ஐம்புலன்களோடும் ஆறாவது புலனான மனத்தோடும் பொருத்திப் பார்க்க முடியும். 


நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களைக் காலமாகவும் விசும்பை இடமாகவும் தமிழ் முன்னோர் நிறுவியுள்ளது போலவே மனிதனின் ஆறாவது புலன் ஆன மனம் இடம் என்றும், மற்ற ஐந்து புலன்கள் காலம் என்றும் தமிழ்முன்னோர் கருதியிருந்ததை மனம் குறித்த ஆய்வில் நாம் உணர முடியும்.  


நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்களுக்கு கடந்தும் உள்ளும் இருக்கிற ஐந்தாவது திரம்- அல்லது கடவுள்- எப்படி வெளி, விண்வெளி, விசும்பு என்று மூன்று நிலைகளைக் கொண்டுள்ளதோ அதுபோன்றே மனிதனின் ஐம்புலன்களின் அறிவை பதிந்து கொள்கிற மனமும் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.


மனம் ஆறாவது புலனாக மட்டும் அமைவது முதலாவது நிலையாகும். அதில் மற்ற ஐம்புலன்களின் அறிவுகள் பதிவது இரண்டாவது நிலை. அந்தப் பதிவுகளைப் பெற்ற வகைக்கு அந்த புலன்களை இயக்குவதும், அந்தப் பதிவுகளை செயலாகவும், எண்ணமாகவும், தமிழாகவும் (எண்ணமொழி) வெளிப்படுத்துவதும் மனத்தின் மூன்றாவது நிலையாகும்.


இந்த வெளிப்படுத்தலில் இயற்கையின் நடைமுறையால் அறிந்ததை இயல்அறிவு என்றும், எதிர்கால நிகழ்வுகளை கணிக்கிற கலையை இயல்கணக்கு என்றும் நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.


இயல் என்பது இயக்கம் என்கிற நடைமுறையும் இயம் என்கிற கோட்பாடும் கொண்டது ஆகும். நடைமுறையும் கோட்பாடும் இயற்கையின் அனைத்தும் கொண்டிருப்பதால் அந்த அனைத்தையும் இயற்கை என்று பேசினர் தமிழ்முன்னோர். ஆக இயற்கை பற்றிய அறிவு இயல்அறிவு ஆகும். அதில் இயற்கையின் கோட்பாடும் நடைமுறையும் இருக்கும். 


இந்த இயல்அறிவைத்தான் ஐரோப்பியஇயல் சயின்ஸ் என்கிறது. நாம்- நமக்கு சயின்சே இல்லாதது போல், உலகின் முதல் அணைக்கட்டான கல்லணையைத் தமிழன் எப்படி கட்டியிருக்க முடியும் என்கிற அறிவுத்தேடலே இல்லாமல், அந்த சயின்சை அறிவாக மலைத்து சயின்சை அறிவியல் என்று பிழையாக மொழிபெயர்த்து புழங்கிக் கொண்டிருக்கிறோம்.


தமிழ்முன்னோர் கண்டு நிறுவிய இயல்கணக்கு ஒன்றைவிட ஒன்று மேம்பட்டதாக மூன்று முன்னேற்றக்கலைகளை கொண்டது ஆகும். 


நாற்பது மதிப்பெண்களுக்கு உரிய முதலாவது முன்னேற்றக் கலை நிமித்தகம் (சாதகம், சோதிடம்) ஆகும். 


அறுபது மதிப்பெண்களுக்கு உரிய, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட இரண்டாவது முன்னேற்றக்கலை கணியம் ஆகும்.

 

எண்பது மதிப்பெண்களுக்கு உரிய, கணியத்தின் மேம்படுத்தப்பட்ட மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் அறிதல் அல்லது கற்றல் நிலை ஆகும். அதே மந்திரத்தின் கற்றல் வழி நிற்றல் நிலைக்கு நூறு மதிப்பெண்கள் அளிக்க முடியும் என்பதை, 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

என்கிற குறளின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.


தமிழ்மக்களின் மனங்களில் பதிந்த ஐந்தறிவுகளின் தொகுப்பே இயல்அறிவு என்று பொது நிலையிலும் தமிழுக்கு மட்டுமான சிறப்பு நிலையில் இயற்றமிழ் என்றும் தமிழ்முன்னோர் நிறுவியது ஆகும். அந்த இயல்அறிவின் கணிப்புகளாகவே அமைந்தன மூன்று முன்னேற்றக் கலைகளான இயல்கணக்கு.


ஆக தனிமனிதனின் மனம்- அவனின் ஐம்புலன்களில் பட்டறிவாக நடப்பு தற்பரை வரை அறிந்தவைகளையும், மற்ற மனிதர்களோடு அவன் தொடர்பு கொண்டு அவர்களின் பட்டறிவை சொல்லக் கேட்டு அறிந்தவைகளையும், கலையாக கல்வியாக நிறுவனங்களின்; இணைந்து படித்த வகையில் அறிந்தவைகளையும் பதிவு செய்து கொண்டுள்ளது.


இந்த அறிவுகளின் மூலம் இயற்கை பொருள்களில் இருந்து உணவு, உடை, இருப்பிடம், பயணம் சார்ந்து இன்றைக்கு கணினி வரையிலான கருவிகளை உருவாக்குவது அவரவர் ஈடுபாடு மற்றும் முனைப்பின் அளவுக்கு பலருக்கும் பல கோணங்களில் சாத்தியமாகிக் கொண்டே வருகிறது. 


ஆக மனத்தின் ஊக்கம் என்பது ஐம்புலன்களை தாங்கிக் கொண்டுள்ள உடலின் நலத்திலும், தலைவன் தலைவி பிள்ளைகள் என்று அமைகிற குடும்பத்தின் நலத்திலும், அறிவுக்காக அனைவரும் பெறுகிற கல்வி வளத்திலும் இருக்கிறது.


தனிமனிதனுக்கு கிடைக்காத இந்த வகைமைகளுக்கான ஏந்துக்கள் மட்டுமே மனஉளைச்சலுக்கான காரணம் ஆகும். இந்தக் கிடைக்காமையைப் பல்வேறு ஏற்றதாழ்வுகள், சமவாய்ப்பு மறுத்தல், வாய்ப்புகளை மறுப்பதற்கு முன்னெடுக்கும் நுழைவுத்தேர்வுகள், பேரினவாத ஆதிக்கங்கள். ஒற்றை மொழி, ஒற்றை மதக் கோட்பாடுகள் திணிப்பு என்பவைகளாக இந்தியச் சட்ட சமூக கட்டமைப்பு பேரளவாகக் கொண்டுள்ளது. இந்தியா விடுதலை பெற்ற கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒற்றையின அதிகார ஆளுமை- கிடைக்காமைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.


மனத்திற்கும் அறிவுக்கும் மகத்துவம் கற்பித்து, அந்த வகையில் மனஉளைச்சலைப் போக்குவதாக, அதே ஆளுமைகள்- மக்களிடம் மூடநம்பிக்கை, கற்பனை புனைவுத் தொன்மங்களைக் கருத்துப்பரப்புதல் செய்து வேறு வகையாக உழைப்பைச் சுரண்டி வருகிறது. 


கல்வி, திருமணம், தொழில், வணிகம், தனித்திறன் ஊக்குவிப்பு ஆகியவற்றில் பிள்ளைகளுக்கு உறுதியளிக்கிற- வகைபாட்டுக் கோட்பாடு அடிப்படையில்- பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகள் பழமை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் குடும்ப அமைப்பு இயங்கி வருவதால்- தமிழ்க்குடும்பம் தனிமனிதனுக்குக் கிடைக்காமையைக் கட்டுப்படுத்தி மனஉளைச்சலைக் குறைப்பதில் பெரும்பங்காற்றி வருகிறது. 


மனம் அறிவை பதித்துக் கொள்வதற்கான புலன். ஈடுபட்டிருக்கிற துறைக்கு தேவையான முழுமையான அறிவைப் பதித்துக்கொள்வதைப் பொறுத்தும் மற்ற ஐம்பலன்களைத் தாங்கியிருக்கிற உடல்நலனைப் பொறுத்தும் மனம் நிறைவு அடைகிறது. மகிழ்ச்சி அடைகிறது. 


மனதை தனியாக வளப்படுத்துவதற்கு எந்தத் தேவையும் இல்லை. கிடைக்காமைகளை கொடுத்தால்; கிடைத்திட்ட மனம் பேரளவாக மகிழவே செய்யும்.


உடல் நலன் பேணுவதும், அறிவை பேரளவாகப்பெறுவதும் மிகமிக எளிமையானதும் எல்லோராலும் பெற முடிந்ததும் ஆகும். அதை 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

என்ற குறளில்- இந்தியாவின் சட்ட சமூக அமைப்பு முன்னெடுக்கிற நுழைவுத்தேர்வு, நீட் என்பனவெல்லாம் ஏமாற்று என்றும், அறிவைப் பெறுவது மிக மிக எளிது என்றும் தெரிவிப்பதற்கு, சின்னக் குழந்தையின் பிஞ்சு விரல்களாலும் தோண்ட முடிகிற மணற்கேணியை அறிவுத் தேடலுக்கு உவமை ஆக்கியுள்ளார் திருவள்ளுவப் பெருந்தகை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,450.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





பிரபஞ்சத்திடம் ஒரு கேள்வி ?


நான் யார் ?

நான் இருப்பதா ?

நான் சிந்திப்பதா ?

நான் செயல்படுவதா?

நான் ஒரு பொருளா ?

நான் ஒரு கருத்தாக்கமா ?

நான் ஒரு செயலின் வடிவமா?


நான் என்று அறியப்படுவது எதனால் !!


அறிவு தான் நானா !!

அறிவின் பிறப்பிடம் நானா !!

அறிவின் ஆக்கம் எது !!


மனமா !!

மனம் என்பது எதனை தேடுகிறது !!

இறந்தகால எச்சங்களையா ?

நிகழ்கால நிதர்சனங்களையா?எதிர்கால எதிர்பார்ப்புகளையா ?


எண்ணங்களை நான் ஏன் பிரிக்கிறேன் !?


எண்ணங்கள் இதயத்திற்கு சொந்தமா !? 

எண்ணங்களின் உதயம் மூளை !!


மூளை இன்றி எதுவும் இல்லை.

அந்த மூளையை ஆட்டி வைப்பது யார் ?

புறக்காரணிகளா ... ?அல்லது

அக அழுத்தங்களா...?


பிரபஞ்சம் என்கிற உண்மையை விளக்க ,விளக்க ,விரிவாகிக் கொண்டே போகும் ஒரு விந்தை.


"கால விசை " -அதை கணக்கிட முடியாது .


காலத்தில் எல்லாம் கரைந்து போகும் .


உயிர் எப்படி உருவானது ?


பிரபஞ்ச கோட்பாடு படி "சக்தியும் சிவனும் "சேர்வதால். அதாவது "பொருள் " மற்றும் "உணர்ச்சிகள் "


இங்கே பொருளை "சிவனாகவும் " (உடலாகவும் )உணர்ச்சிகளை "சக்தியாகவும் " கொள்ளலாம்.


ஆக உடல் ,உயிர் கொண்ட இந்த இயக்கம் காலம் , வெளியில் (time and space )பிரவேசித்து பிறகு காலத்தின் கட்டுப்பாட்டில் வளர்ந்து மூப்பு அடைந்து பிறகு மாய்கிறது.


இந்த மாயையை இருக்கும் வரை உண்மை என கொள்கிறோம்.


பிரிந்த பிறகு அது ஒரு "ஆன்மாவாக " காற்றாக நம்மிடம் பயணப்படும் ஒரு உந்து விசை.


இந்த விசையை அறிந்து தான் திருமூலர் பாடி வைத்தார் "எச்சமும் மிச்சமும் "இந்த பிரபஞ்சத்திற்கு சொந்தம்.


இங்கே ஏற்பது கோட்பாடு .

அது விதியன்று.


ஏற்கும் இடத்தில் எல்லாம் இன்பமயம்.



உடல் இன்றி அமையாது உயர் ;


உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே !


ஆக , உடலின் இயக்கம் உண்டாக உயர் தேவை ; ஆனால் முதலில் தோன்றியது பொருளாகிய உடலே!



எப்படி என்றால் : விந்து என்கிற ஒரு "பொருள் " முட்டை என்கிற ஒரு "பொருளோடு " கலந்து ஒன்று சேர அங்கே கரு உருவாகி வளர்ந்து உயிர் உதயமாகிறது.



ஆக, பிரபஞ்சம் எல்லாவற்றையும் பொருளாக பார்த்து, வளர்த்து , பிறகு பிரித்து தன்னிடம் ஆட்கொள்கிறது. 


பொருளுக்கு தேய்மானம் உண்டு - இயற்கை நியதி.


இந்த உண்மையை அறிந்தால் , வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்று புலப்படும்.


பயணப்படுவது படகாகிய உடல்;

உயிர் என்கிற அந்த துடுப்பை நாம் செலுத்தி நம் உடலைப் பாதுகாக்க வேண்டும்.


அப்போது பயணம் இனிமையாக இருக்கும்.


உடலே உயிரை ஆள்கிறது.

உயிர் நேர்வினை ஆற்ற , 

நல்ல சிந்தனை செழிக்க, 

செயல் திறன் மேப்பட , 

மனதை ஆற்றல் பெற செய்ய வேண்டும்.


மனமே மா மருந்து ; அதை அவ்வப்போது பாதுகாத்து , பதப்படித்தி ,படிப்படியாக வேலை வாங்க வேண்டும்.


ஆக, உடலைப் போற்றுவோம்.


உள்ளம் என்பது "கோவில் " அதில் "உயிர் "என்பது தெய்வம். அந்த "தெய்வம் 1 எல்லோராலும் வணங்கப்பட வேண்டும் .


அதற்கு வீடாகிய உடலை உள்ளம் உள்ள வரை பாழாகாமல் புத்துயிரோடு வைத்துக் கொள்வோம்.




நன்றி.



ராமன். செல்வராஜ்.


தேதி: 24.12.2025


https://www.kalkionline.com/author/raman-selvaraj 




For kind information.. 


The Ode was written after reading magnus Opus 

"Sapiens: A Brief History of Humankind" by Yuva

l Noah Harari.



The link...


https://read.amazon.in/kp/kshare?asin=B00ICN066A&id=v6g2hbbrvrgljghjhjrrnantfe

Comments

Popular posts from this blog

A Appeal For A Cause

எல்லாம் நம் செயல்

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!