எல்லாம் நம் செயல்
"எல்லாம் நம் செயல் "
சுரேஷ் நடந்து கொண்டே இருந்தான். நடப்பது அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக அல்ல, நடப்பது ஒரு கடமையாகப் பட்டது. அதுவும் குளிப்பது, உண்பது, வேலைக்கு செல்வது, மாலை வருவது, மீண்டும் உண்பது, உறங்குவது போல என்று வாடிக்கையாகி விட்டது.
ஐராதீஸ்வரர் (குடந்தை-தாராசுரம்) கோயிலை 6 முறை சுற்றுவது அவனுக்கு அவனே இட்டுக் கொண்ட கட்டளை.
''இன்று சற்று மயக்கம் வருகிறதே'' என்ற எண்ணம் உதிக்க, சற்றே இளைப்பாற உட்கார்ந்தான்.
'சிந்தனை சிறை கைதியாக அமைதியாக இளைப்பாற முடியவில்லை. உடம்புக்கு ஏதாவது இருக்குமோ, இன்றே மாலை ஆபிஸ் முடிந்தவுடன் மருத்துவரிடம் காண்பிக்கே வேண்டும்'.
சே, ஒரு வேலை ஒழுங்காக முடிக்க முடியவில்லை. என்னுடைய அடுத்த நகர்வை இந்த ஓய்வு கெடுத்துவிட்டது.
இப்படித்தான் எந்தே வேலை எடுத்துக் கொண்டாலும் ஒரு தடை என்னை வாட்டுகிறது- வாட்டுவது என்பதை விட வதைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
"அவன் அவன் தன் காரியத்தை எப்ப படி சுலபமாக செய்து கொண்டு போகிறான். எனக்கு 'வந்ததாலும்' 'வாய்த்ததாலும் ' எந்த சந்தோஷமும் இல்லை.
முயற்சி செய்து வீட்டில் எல்லோரையும் கரிசனத்துடன், அக்கறையுடன் செயல்பட்டு அமைதியாக வாழ முனைகிறேன்."
ஏனோ கடவுள் எனக்கு அந்த பாக்கியத்தை அருளவில்லை.
எதற்கு எடுத்தாலும் குறைகாணும் - மனைவி; சந்தேகப்படும் மேனேஜர்; ஒத்துஉழைக்காத சக ஊழியர்கள்; ஆக நிம்மதிக்காக நடந்தால் என் எண்ணம் என்னை வாட்டுகிறது.
கடவுளே !! உன்னிடம் சரணாகதி அடைந்துவிடுகிறேன் ;என்னை எப்படியாவது காப்பாற்று!
கும்பிட்டுக்கொண்டே வெளி பிரகாரத்தில் தன்னை மறந்து தியானித்துக்கொண்டு நின்றான்.
தன்னை மறக்க நினைத்த போது உடல் உதறியது; தலையை வேகமாக ஆட்டினான்.
அப்போதுதான் உணர்ந்தான்-"காக்கா தலையில் "மூச்சா " போய் இருப்பது.
ஆமாம். தம் "இருந்தலை" உணராமல் உணர்த்தி சென்ற காக்கையை அண்ணாந்தது பார்த்தான்.
பார்க்கத்தான் முடியும்.
பரவசம் அடைய பழக வேண்டும்.
பழக்கப் பட வேண்டும்.
எல்லாம் நம் செயல்!!!!!??
Comments
Post a Comment