Posts

Showing posts with the label experience

இப்படியும் ஒரு நினைப்பா?

என்ன பேசுவது; எதைப் பற்றி பேசுவது; என்ன பொருளைப் பற்றி பேசுவது - ஒரே குழப்பம் !! சற்று நேரத்தில் நிதானித்துக் கொண்டு எல்லோருக்கும் தெரிந்த ஒரு கருத்தை கேட்ப்பவர்களுக்கு தெரியாதது போல நினைத்து , அவர்களுக்கு ஒரு புது செய்தியாக ஏன் சொல்லக் கூடாது என்று நினைத்தான் அருட்செல்வன். அவனுக்கு அழைப்பு அரை மணி நேரத்திற்கு முன்பு தான் வந்தது. அந்த நூற்றாண்டு அரங்கில் ஒப்பந்தப் படி வரவிருக்கும் நபர் உடல் நலக்குறைவால் வர முடியவில்லை என்பதால் இவனுக்கு அழைப்பு விடுத்து உடனே தயாராக இருக்கச் சொல்லி விழா ஏற்பாடு செய்பவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு முடிவுக்கு வந்தான் அவன். கார் வீட்டுக்கு முன் வந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த அண்ணா நூற்றாண்டு நூல் நிலைய வளாகத்தை அடைந்து விடுவோம். கொடுத்த தலைப்பு - " எதுவாகினும் நான் " அல்லது எந்த ஒரு சமுதாய புரிதலுக்கு உட்பட்ட தலைப்பை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறி இருந்தனர். அருள் செல்வன் :- தமிழ் முனைவர் பட்டம். தற்போது "இளைய சமுதாயம் " - தொலைக் காட்சி ஊடகத்தில் " கதை கள தேர்வு" உருப்பினராகவும் , நிகழ்ச்ச...