வந்தாள் மகாலெட்சுமியே

நான் எது செய்தாலும் அதில் ஒரு குறை கண்டு பிடிப்பதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டு இருக்கிறாய்.


அப்படி எதை ஒழுங்காக செய்து முடித்தீர்கள்!

என் தியாகங்களை பட்டியல் இட்டு பிரசங்கம் பண்ண, நான் ஒன்னும் உன் தகப்பன் மாறி அரசியல்வாதி இல்லை?

"பாருங்க!. இது நமக்கு இருவருக்கும் நடக்கும் குடும்ப பிரச்சனை; என் அப்பனை இழுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை; அதை புரிஞ்சுக்குங்க முதல்லே"

சரி, அப்ப எதற்கு எடுத்தாலும் என்னைப் பற்றி குறை கூறும் போது, என் அம்மாவை இழுக்கிறாயே! அது என்ன நியாயம்?

அதை விடுங்க . 'எனக்கு இரண்டு லட்சம் வேணும் என்று சொல்லி ஒரு மாதம் ஆகிறது. "உன் தங்கை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னீர்களே! அது என்னவாம் !?


'அப்படி வா; கடவுள் உங்களைப் படைக்கும்போது ஒரு சூட்சுமம் வைத்து படைத்து இருப்பார் போல'

அதனால் தான் எதையும் நேர்மறையாக கேட்காமல், எதிர்மறையாக சண்டையிடுகிறீர்கள்!

போதும் உம் சம்பாசணை.என் அப்பாவுக்கு தெரிந்தால் , தூக்குபோட்டு இறந்துவிடுவார்.

அடியேய்! இதிலும் இவ்வளவு வில்லங்கமா? உதவி என்று கேட்டுவிட்டு மிரட்டி பணம் பறிக்கும் வழிப்பறி குடும்பமா ? உங்கள் குடும்பம்! என்று கூறி ரூபாய் 2.00 லட்சத்திற்கான பண வோலையை நீட்டினான்.


இதை முதலில் சொல்லி இருந்தால் இவ்வளவு சண்டை வந்து இருக்காது.


'வரட்டும், வரவேண்டும். வாழ்க்கை உன்னோடுதான் என்று வந்தபிறகு அதில் சலிப்பை காண்பது எனக்கு அழகு அல்ல'.


ஏது !? அப்படியே முகம் மலர்ந்தாள்! மலர்கள் வாசத்தை மட்டும் பரப்பவில்லை. நல்ல விடியலையும் அவனுக்கு தந்தது.

இரவுகள் வரை அது தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.



Comments

Popular posts from this blog

A Appeal For A Cause

எல்லாம் நம் செயல்

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!