யாருக்கும் உரிமை இல்லை.

 'என்னதான் இருந்தாலும் நீ அப்படி சொல்லி இருக்கக் கூடாது, ரொம்ம வருத்தப்பட்டான்'.


சொல்லி சொல்லி ஆத்துப்போறான்.


அப்படி என்ன தான் அவனை சொன்ன?


நான் சொல்றது இருக்கட்டும், இதற்கு காரணம் தெரியாம பேசாதே!?


என்ன அப்படி பொல்லாத காரணமோ?


சொல்றேன். ஆனால் சொல்றதுக்கு முன்னாடி , அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்பதை கேட்காமல் நான் சும்மா இருக்கப்போவது இல்லை.


அப்பா! சும்மா இறு! அல்லது சும்மா இல்லா போ ; அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.


அவன் சொல்றதைச் சொல்லி விட்டேன். இனி உன்பாடு, அவன் பாடு, எனக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லே இதுலே ?


'அது சரி ,சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கிறது மாதிரி, சும்மா விட மாட்டேன் உங்க ரெண்டு பேரையும் . ஞாபகம் வைத்துக்கோ'.


டேய் ! விஷயத்துக்கு வா ! நான் நேற்று காலை வேலை விஷயமாக கீழ்பாக்கம் செல்வதற்கு பரங்கிமலை ஸ்டேஸன் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்தேன்.



அப்போது என்னைப் பார்த்த அஸ்வின் எப்படி இருக்க என்று விசாரித்தான். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் நம்மோட படித்த தோழமைக்காக விசாரிக்கும் போது உன்னப்பற்றி பேச்சு வந்தது.


உடனே அவன் சொன்ன ஒரு வார்த்தை " அவனைப் பற்றி என்னிடம் பேசாதே "


அதற்காகத்தான் அப்படி என்ன சொன்ன ? அப்படி என்ன நடந்தது என்று கேட்டேன் .


அதற்குள் ஆமா , சூமா பண்ணி விட்டான்! அஸ்வின். மேலும் 'சென்ரல்' செல்வதாக வருத்தப்பட்டு விலகினான் .


அப்படி இல்லேடா ? நீ வந்தே. இப்போ ஆற, அமற பேசினோம். நல்ல நினைவுகளை பகிர்ந்தோம்.


அந்தப் பய அப்படியா? ஒரே திமிர், நம்பிக்கை துரோகம் | பழைச எண்ணிப்பார்க்காத ஒரு பண்ணாடை.


சேரி .நான் கிளம்புகிறேன்.


வெளியேறிய சுரேஷ் ஒரு செய்தியை உடனே அஸ்வினுக்கு அனுப்பினான்.


"நான் குமாரை சந்தித்தேன். நல்ல உபசரிப்பு, பழைய ஞாபகங்கள், பள்ளி அனுபவங்கள், குடும்ப விஷயங்கள் என ஒருநாள் போனதே தெரியவில்லை".


இன்று விடைப்பெற்று என் ஊர் கும்பகோணம் கிளம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்.


முடிந்தவரை நட்டை பாராட்டு; இல்லையெனில் விட்டு விலகு.


இப்படியாக whatsapp பண்ண உடனே அவனுக்கு Video Call வந்தது. அப்பா, ஆண்டான் அடிமை, இப்போது நீ எங்கே இருப்பே என்று எனக்கு தெரியாது. இப்போது சொல்றேன். கேள்! அவனுடன் சேராதே; அவன் ஒரு பணப் பிடுங்கி. எப்போ, எங்கே என்று பார்க்காமல் பழைய நண்பர்கள் பலரிடம் பணம் வாங்கி திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு வருகிறான்.


அவனை நம்பி ஏமாராதே? எனக்கு படிப்படியா ஒரு லட்சம் வரை கொடுக்க வேண்டும்.


நல்ல வேளை நான் இப்போது என் வீட்டிற்கு செல்ல ரயில் ஏறிவிட்டேன்.



மீண்டும் கால் வந்தது."நான் குமார் பேசுகிறேன். செய்தி வந்து இருக்கும். இப்படித்தான் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் இரண்டு லட்சம் கொடுக்க வேண்டும் என்று அனுப்பி இருப்பான்.



நம்பாதே! உண்மை என்ன வென்றால்;' என்னைப் பற்றி நண்பர்களிடம் அவதூறு பரப்பி அதை பெரிய விஷயமாக்கி எனக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவன் எண்ணம்.



ஏன் அப்படி செய்கிறான் என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்.


அஸ்வின் தன் காதல் மனைவி கல்லூரி நாட்களில் குமாரிடம் பழகியதும் அதை குமார்  Social Media வில் பகிர்ந்ததும் இப்போது நண்பர்கள் மத்தியில் Viral ஆகி வருகிறது.


குமார் ஒரு psycho ஆக மாறிவிட்டான் என்று இவன் சொல்ல , அவனைப் பற்றி இவன் ஒரு பணபித்தலாட்டம் செய்பவன் என்று விமிர்சிக்க எனக்கு ஏண்டா இவர்கள் இரண்டு பேரையும் சந்தித்தோம் என்று ஆகிவிட்டது.


தெரிவதை விட, தெரியாமல் பல விஷயங்கள் இருப்பது நல்லது என்று எனக்கு தோணுகிறது.


என்ன செய்ய. வாழ்க்கை பல வினோதங்களை நமக்கு புகட்டிக்கொண்டு இருக்கிறது.



உண்மை ,பொய்களை ஆராய எவருக்கும் உரிமை இல்லை.

Comments

Popular posts from this blog

எல்லாம் நம் செயல்

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!