Posts

Showing posts from September, 2022

வந்தாள் மகாலெட்சுமியே

நான் எது செய்தாலும் அதில் ஒரு குறை கண்டு பிடிப்பதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டு இருக்கிறாய். அப்படி எதை ஒழுங்காக செய்து முடித்தீர்கள்! என் தியாகங்களை பட்டியல் இட்டு பிரசங்கம் பண்ண, நான் ஒன்னும் உன் தகப்பன் மாறி அரசியல்வாதி இல்லை? "பாருங்க!. இது நமக்கு இருவருக்கும் நடக்கும் குடும்ப பிரச்சனை; என் அப்பனை இழுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை; அதை புரிஞ்சுக்குங்க முதல்லே" சரி, அப்ப எதற்கு எடுத்தாலும் என்னைப் பற்றி குறை கூறும் போது, என் அம்மாவை இழுக்கிறாயே! அது என்ன நியாயம்? அதை விடுங்க . 'எனக்கு இரண்டு லட்சம் வேணும் என்று சொல்லி ஒரு மாதம் ஆகிறது. "உன் தங்கை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னீர்களே! அது என்னவாம் !? 'அப்படி வா; கடவுள் உங்களைப் படைக்கும்போது ஒரு சூட்சுமம் வைத்து படைத்து இருப்பார் போல' அதனால் தான் எதையும் நேர்மறையாக கேட்காமல், எதிர்மறையாக சண்டையிடுகிறீர்கள்! போதும் உம் சம்பாசணை.என் அப்பாவுக்கு தெரிந்தால் , தூக்குபோட்டு இறந்துவிடுவார். அடியேய்! இதிலும் இவ்வளவு வில்லங்கமா? உதவி என்று கேட்டுவிட்டு மிரட்டி பணம் பறிக்கும் வழிப்பறி குடும்...

எல்லாம் நம் செயல்

 "எல்லாம் நம் செயல் " சுரேஷ் நடந்து கொண்டே இருந்தான். நடப்பது அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக அல்ல, நடப்பது ஒரு கடமையாகப் பட்டது. அதுவும் குளிப்பது, உண்பது, வேலைக்கு செல்வது, மாலை வருவது, மீண்டும் உண்பது, உறங்குவது போல என்று வாடிக்கையாகி விட்டது. ஐராதீஸ்வரர் (குடந்தை-தாராசுரம்) கோயிலை 6 முறை சுற்றுவது அவனுக்கு அவனே இட்டுக் கொண்ட கட்டளை. ''இன்று சற்று மயக்கம் வருகிறதே'' என்ற எண்ணம் உதிக்க, சற்றே இளைப்பாற உட்கார்ந்தான். 'சிந்தனை சிறை கைதியாக அமைதியாக இளைப்பாற முடியவில்லை. உடம்புக்கு ஏதாவது இருக்குமோ, இன்றே மாலை ஆபிஸ் முடிந்தவுடன் மருத்துவரிடம் காண்பிக்கே வேண்டும்'. சே, ஒரு வேலை ஒழுங்காக முடிக்க முடியவில்லை. என்னுடைய அடுத்த நகர்வை இந்த ஓய்வு கெடுத்துவிட்டது. இப்படித்தான் எந்தே வேலை எடுத்துக் கொண்டாலும் ஒரு தடை என்னை வாட்டுகிறது- வாட்டுவது என்பதை விட வதைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். "அவன் அவன் தன் காரியத்தை எப்ப படி சுலபமாக செய்து கொண்டு போகிறான். எனக்கு 'வந்ததாலும்' 'வாய்த்ததாலும் ' எந்த சந்தோஷமும் இல்லை. முயற்சி செய்து வீட்டில் எல்...

யாருக்கும் உரிமை இல்லை.

 'என்னதான் இருந்தாலும் நீ அப்படி சொல்லி இருக்கக் கூடாது, ரொம்ம வருத்தப்பட்டான்'. சொல்லி சொல்லி ஆத்துப்போறான். அப்படி என்ன தான் அவனை சொன்ன? நான் சொல்றது இருக்கட்டும், இதற்கு காரணம் தெரியாம பேசாதே!? என்ன அப்படி பொல்லாத காரணமோ? சொல்றேன். ஆனால் சொல்றதுக்கு முன்னாடி , அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்பதை கேட்காமல் நான் சும்மா இருக்கப்போவது இல்லை. அப்பா! சும்மா இறு! அல்லது சும்மா இல்லா போ ; அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அவன் சொல்றதைச் சொல்லி விட்டேன். இனி உன்பாடு, அவன் பாடு, எனக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லே இதுலே ? 'அது சரி ,சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கிறது மாதிரி, சும்மா விட மாட்டேன் உங்க ரெண்டு பேரையும் . ஞாபகம் வைத்துக்கோ'. டேய் ! விஷயத்துக்கு வா ! நான் நேற்று காலை வேலை விஷயமாக கீழ்பாக்கம் செல்வதற்கு பரங்கிமலை ஸ்டேஸன் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்தேன். அப்போது என்னைப் பார்த்த அஸ்வின் எப்படி இருக்க என்று விசாரித்தான். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் நம்மோட படித்த தோழமைக்காக விசாரிக்கும் போது உன்னப்பற்றி பேச்சு வந்தது. உடனே அவன் சொன்ன ஒரு வார்த்தை " அவனைப்...

Who Am I ?

 https://store.pothi.com/book/ebook-raman-selvaraj-who-me-what-me-me https://store.pothi.com/book/ebook-raman-selvaraj-bonhomie      

We are We ?

 https://www.amazon.com/Selvaraj-Raman/e/B0B372NG1D https://www.amazon.com/Raman-Selvaraj/e/B07TX8ZZBY