Posts

ஐந்திணை இருநூற்றைம்பது நூல் வெளியீடு - இடம் YMCA. நந்தனம்.

Image
Booksellers and Publishers Association of South India.  BAPASI 2024 தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக எஸ்.வயிரவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பபாசி’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது இதில் ‘குமரன் பதிப்பகம்’ எஸ்.வயிரவன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘நாதம் கீதம்’ எஸ்.கே.முருகன் மீண்டும் செயலாளராகவும், ‘லியோ புக்ஸ்’ ஏ.குமரன் பொருளாளராகவும், ‘வனிதா பதிப்பகம்’ பெ.மயில வேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), ‘மதுரை, சர்வோதய இலக்கியப்பண்ணை’ வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), ‘முல்லை பதிப்பகம்’ மு.பழநி இணைச் செயலாளராகவும், ‘உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்’ இராம.மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), ‘டைகர் புக்ஸ்’ எஸ்.சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நிர்வாகக் குழு (தமிழ்) உறுப்பினர...

ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!!

பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி , மணத்தக்காளி, பொண்ணாங்கண்ணி, முலைக்கீரை .... முலைக்கீரை, பச்சைக்கீரை, மனத்தக்காளிக் கீரையோ, கீரை, கீரை.... இப்படி சொல்லிக் கொண்டே போகும் ஒரு வயது முதிர்ந்த பெரும் பாட்டியை தினமும் நடைப் பயணத்தில் எதிர்கொள்வது இயல்பாக அழைத்தது. அன்று 7 மணி. திரும்பும் போது அந்த கீரை அம்மாவும் நானும் ஒரு சேர நடந்து வந்தோம். ஒரு 50 அடி சென்ற பின் ஒரு வீட்டின் மதில் சுவரில் தன் கூடையை தாங்கலாக வைத்தார் . இது தான் சமயம் என்று என் விவாதத்தை தொடங்கும் முன் முதியவரிடம் இருந்து 3 கீரை கட்டை ரூ 60 கொடுத்து வாங்கிக் கொண்டேன். பாரம் குறைந்ததா என்று ஆரம்பித்தேன் ? இதில் 15 கிலோவிற்கு மேலே என் முதலாளி ஏற்றி வைத்து இருக்கிறார் !! அங்க , அங்க நின்னு சற்று இளைப்பாறி பின் என் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள் ? மாத்தூர் - (இது குடந்தையில் இருந்து 5 கிலோ மீட்டர் இருக்கும்) . அங்கு உள்ள அந்த நிலக்கிழார் தன் வயலில் விளைந்த விளைச்சலை வியாபாரத்திற்காக இந்த பாட்டியிடம் கொடுத்து இருக்கிறார் என்பதை அறிந்தேன். வயது .... அது என்ன ... 60க்கு மேலத்தான் இருக்கும் .  சர...

இப்படியும் ஒரு நினைப்பா?

என்ன பேசுவது; எதைப் பற்றி பேசுவது; என்ன பொருளைப் பற்றி பேசுவது - ஒரே குழப்பம் !! சற்று நேரத்தில் நிதானித்துக் கொண்டு எல்லோருக்கும் தெரிந்த ஒரு கருத்தை கேட்ப்பவர்களுக்கு தெரியாதது போல நினைத்து , அவர்களுக்கு ஒரு புது செய்தியாக ஏன் சொல்லக் கூடாது என்று நினைத்தான் அருட்செல்வன். அவனுக்கு அழைப்பு அரை மணி நேரத்திற்கு முன்பு தான் வந்தது. அந்த நூற்றாண்டு அரங்கில் ஒப்பந்தப் படி வரவிருக்கும் நபர் உடல் நலக்குறைவால் வர முடியவில்லை என்பதால் இவனுக்கு அழைப்பு விடுத்து உடனே தயாராக இருக்கச் சொல்லி விழா ஏற்பாடு செய்பவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு முடிவுக்கு வந்தான் அவன். கார் வீட்டுக்கு முன் வந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த அண்ணா நூற்றாண்டு நூல் நிலைய வளாகத்தை அடைந்து விடுவோம். கொடுத்த தலைப்பு - " எதுவாகினும் நான் " அல்லது எந்த ஒரு சமுதாய புரிதலுக்கு உட்பட்ட தலைப்பை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறி இருந்தனர். அருள் செல்வன் :- தமிழ் முனைவர் பட்டம். தற்போது "இளைய சமுதாயம் " - தொலைக் காட்சி ஊடகத்தில் " கதை கள தேர்வு" உருப்பினராகவும் , நிகழ்ச்ச...

இப்படித் தான் இருக்க வேண்டும்

வயது 70 ஐ கடந்து இருக்கும். அடர்ந்த புருவம் .எடுத்து வாறி கட்டிய முடி .சடை போடவில்லை. நல்ல சிவப்பு நிறம். பார்த்தால் ஐரோப்பியர் என்று சொல்லிவிடலாம்.  இடம் : ஐராதீஸ்வரர் கோயில், தாராசுரம். காலை 7.30 மணி சனிக்கிழமை. தனியாக கோயிலில் வலம் வந்து கொண்டு இருந்தார்.  நான் தினமும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அவர் தெய்வநாயகி அம்மன் உடன் உறை ஐராதீஸ்வரர் சாமி கோயிலுக்குள் நுழைவதைக் கண்டேன்.  ஏதே என்னுள் மனசு தவித்துக் கொண்டு இருந்தது. அது அவரை நோக்கி நடக்க செய்தது . கால்கள் நிடந்தன .அவர் வெளி கோபுரத்தை பார்வையிட்டார்.மிதுவாக நடந்தார் .பிறகு பன்புறம் உள்ள விமானத்தை பார்த்து அதை கமேரவிற்குள் பதிவு பார்த்து ஏற்றுக் கொண்டார். பிறகு ஒவ்வொறு கற்சிற்பத்தை உற்று நோக்கி அங்கேயே 3 நிமிடங்களுக்கு மேல் நின்று பார்த்து, சிலாகித்து, உணர்ந்து, குறிப்புகளை எடுப்பது என்னை பெரிதும் ஆச்சரியதிற்கு உள்ளாக்கியது. அவரிடம் மெதுவாக சென்று என்னை அறிமுகம் படித்துக் கொண்டேன். அவர் ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார்; தன்னை ஒரு ஜெர்மானியர் என்றும் சொன்னார். நான் அவரிடம் அக்கறை இருப்பது போல் காட்...

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!

வணக்கம். ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு,         குறிஞ்சி திணையில் எழுதுபவர்கள் பாலை திணையிலும்          முல்லை திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்     மருதம் திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்          நெய்தல் திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும்          பாலை திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும்  2 பாடல்கள் இயற்றி அனுப்பி வைக்க இறுதி நாள் 31-08-2023. தமிழில் எழுதினால் அவமானமில்லை வருமானம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நூலில் ஆசிரியராகப் பங்கெடுக்கும் பாவலர்கள் அனைவரையும் புத்தகக் காட்சி மேடையில் விலைமதிப்புள்ள ஒன்றோடு நாம் சிறப்பிக்கும் வண்ணம் சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆகவே 2 பாடலா.. மரபா.. என மனம் தளராமல் தாங்கள் முழு மனதோடு பங்கேற்று வெற்றி பயணத்தில் உடன் வர ஒவ்வொருவரையும் தமிழன்போடு அழைக்கிறோம். இணையாதவர்கள் இணைய விரும்பினால் இணைந்து கொள்ளலாம். இந்த நூலில் இணையாமல், குழுவில் இருப்பவர்க...

Anton Chekhov _my inspiration

  திக் , திக் காட்சிகள் ; ஊரின்  தெரு கோடியில் இருந்து....... அந்த மனை சுமார் 50 வருடங்களுக்கு மேலாக காலியாகவே இருந்தது. அதன் எதிரே அரசினர் ஆரம்பப் பள்ளிகூடம். அங்கே தான் தேர்தலின் போது பூத் அமைத்து ஓட்டுப் போட எல்லா ஏற்பாடுகளும் செய்து கோலகலமாக இருக்கும். இரு புறமும் வீடுகள். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அந்த மனைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இது ஒரு சாபமாக பார்க்கப்பட்டது. காரணம் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. அந்த மனை சுமாராக 1/2 cent அதாவது 5 கிரவுண்ட்க்கு மேல் என்று சொல்லிக்கொள்ளலாம். ஒரு வழியாக அந்த தெரு கவுண்சலர் அங்கே ஷெட் அமைத்து 10 கார்கள் நிற்பதற்கு வழி வகை செய்தார். இதன் மூலம் அங்கே மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. ஆரம்பித்து ஒரு சில மாதங்கள்தான் ஆகி இருக்கும். சுமார் 8 மணி அளவில் காலையில் கூட்டம் கூடியது. அதுவே சிறுக சிறுக பெரிய போர் களமாக மாறியது. எங்கும் கூச்சல், குழப்பம் . தெருவே அல்லோல, மல்லோல பட்டது போங்க !! காவல் துறைக்கு செய்தி அனுப்பப்பட்டு S.P அங்கு வந்து கூடினார். மனை சுத்தமாக தடுக்கப்பட்டு அங்கு செல்ல யாவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. செய்தி...

இரவுகள் என்றும் கனவுகள்.

 இரவுகள் என்றும் கனவுகள். கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது. யார் சொன்னது "காலத்தை கடக்க முடியாது என்று "? நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட கதைகள் -ஏராளம் ,ஏராளம். இந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது. நான் ஒரு நாள் என்பாட்டியிடம் கேட்டேன். கடவுள் யார்? கண்ணை மூடிப்பார் கடவுள் தெரிவார்!!! கண்ணை மூடினேன், தெரியவில்லை என்றேன். திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!!! நான் 'கவிஞர் இல்லை' கடவுளை காண என்றேன்; தொடர்ந்தது என் இமைகள்; கடந்தது என் கற்பனைகள். -இப்போது ஒரு வினவல்; எப்படி அறிவது ? பாட்டி- 'எனக்கான வைத்தியத்தை கொடுத்தாள்'. தெரிதலில் தெளிதல் பெற அறிவதில் ஆர்வம் வேண்டும். இந்த அறிதல் தொடர்ந்தால் "கவிஞரே கடவுள் என்றாள்". என் "அநுபூதி " சொன்னது. நீ படைக்கப்பட்டு இருக்கிறாய். உன் எழுதளும், வீழ்தளும் உன் சக படைப்பின் உழைப்பினால் அன்றி வேறு எதுவும் இல்லை. எனவே தான் என்ற தன்னை மறந்து தமது என்ற ஏற்றுமை ஒங்க உணர்வு கொள். மனித உணர்வே ஆத்ம உணர்வு; ஆன்மீக உணர்வு. அன்பை அறவணை ;ஆற்றல் பெறுகும...