இப்படித் தான் இருக்க வேண்டும்
வயது 70 ஐ கடந்து இருக்கும். அடர்ந்த புருவம் .எடுத்து வாறி கட்டிய முடி .சடை போடவில்லை. நல்ல சிவப்பு நிறம். பார்த்தால் ஐரோப்பியர் என்று சொல்லிவிடலாம். இடம் : ஐராதீஸ்வரர் கோயில், தாராசுரம். காலை 7.30 மணி சனிக்கிழமை. தனியாக கோயிலில் வலம் வந்து கொண்டு இருந்தார். நான் தினமும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அவர் தெய்வநாயகி அம்மன் உடன் உறை ஐராதீஸ்வரர் சாமி கோயிலுக்குள் நுழைவதைக் கண்டேன். ஏதே என்னுள் மனசு தவித்துக் கொண்டு இருந்தது. அது அவரை நோக்கி நடக்க செய்தது . கால்கள் நிடந்தன .அவர் வெளி கோபுரத்தை பார்வையிட்டார்.மிதுவாக நடந்தார் .பிறகு பன்புறம் உள்ள விமானத்தை பார்த்து அதை கமேரவிற்குள் பதிவு பார்த்து ஏற்றுக் கொண்டார். பிறகு ஒவ்வொறு கற்சிற்பத்தை உற்று நோக்கி அங்கேயே 3 நிமிடங்களுக்கு மேல் நின்று பார்த்து, சிலாகித்து, உணர்ந்து, குறிப்புகளை எடுப்பது என்னை பெரிதும் ஆச்சரியதிற்கு உள்ளாக்கியது. அவரிடம் மெதுவாக சென்று என்னை அறிமுகம் படித்துக் கொண்டேன். அவர் ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார்; தன்னை ஒரு ஜெர்மானியர் என்றும் சொன்னார். நான் அவரிடம் அக்கறை இருப்பது போல் காட்...