Anton Chekhov _my inspiration
திக் , திக் காட்சிகள் ; ஊரின் தெரு கோடியில் இருந்து....... அந்த மனை சுமார் 50 வருடங்களுக்கு மேலாக காலியாகவே இருந்தது. அதன் எதிரே அரசினர் ஆரம்பப் பள்ளிகூடம். அங்கே தான் தேர்தலின் போது பூத் அமைத்து ஓட்டுப் போட எல்லா ஏற்பாடுகளும் செய்து கோலகலமாக இருக்கும். இரு புறமும் வீடுகள். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அந்த மனைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இது ஒரு சாபமாக பார்க்கப்பட்டது. காரணம் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. அந்த மனை சுமாராக 1/2 cent அதாவது 5 கிரவுண்ட்க்கு மேல் என்று சொல்லிக்கொள்ளலாம். ஒரு வழியாக அந்த தெரு கவுண்சலர் அங்கே ஷெட் அமைத்து 10 கார்கள் நிற்பதற்கு வழி வகை செய்தார். இதன் மூலம் அங்கே மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. ஆரம்பித்து ஒரு சில மாதங்கள்தான் ஆகி இருக்கும். சுமார் 8 மணி அளவில் காலையில் கூட்டம் கூடியது. அதுவே சிறுக சிறுக பெரிய போர் களமாக மாறியது. எங்கும் கூச்சல், குழப்பம் . தெருவே அல்லோல, மல்லோல பட்டது போங்க !! காவல் துறைக்கு செய்தி அனுப்பப்பட்டு S.P அங்கு வந்து கூடினார். மனை சுத்தமாக தடுக்கப்பட்டு அங்கு செல்ல யாவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. செய்தி...