Posts

Showing posts from February, 2023

இரவுகள் என்றும் கனவுகள்.

 இரவுகள் என்றும் கனவுகள். கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது. யார் சொன்னது "காலத்தை கடக்க முடியாது என்று "? நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட கதைகள் -ஏராளம் ,ஏராளம். இந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது. நான் ஒரு நாள் என்பாட்டியிடம் கேட்டேன். கடவுள் யார்? கண்ணை மூடிப்பார் கடவுள் தெரிவார்!!! கண்ணை மூடினேன், தெரியவில்லை என்றேன். திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!!! நான் 'கவிஞர் இல்லை' கடவுளை காண என்றேன்; தொடர்ந்தது என் இமைகள்; கடந்தது என் கற்பனைகள். -இப்போது ஒரு வினவல்; எப்படி அறிவது ? பாட்டி- 'எனக்கான வைத்தியத்தை கொடுத்தாள்'. தெரிதலில் தெளிதல் பெற அறிவதில் ஆர்வம் வேண்டும். இந்த அறிதல் தொடர்ந்தால் "கவிஞரே கடவுள் என்றாள்". என் "அநுபூதி " சொன்னது. நீ படைக்கப்பட்டு இருக்கிறாய். உன் எழுதளும், வீழ்தளும் உன் சக படைப்பின் உழைப்பினால் அன்றி வேறு எதுவும் இல்லை. எனவே தான் என்ற தன்னை மறந்து தமது என்ற ஏற்றுமை ஒங்க உணர்வு கொள். மனித உணர்வே ஆத்ம உணர்வு; ஆன்மீக உணர்வு. அன்பை அறவணை ;ஆற்றல் பெறுகும...